கொட்டும் மழையில் குடையுடன் வந்து திருடி சென்ற இளைஞர்கள்..!


கொட்டும் மழையில் குடையுடன் வந்து திருடி சென்ற இளைஞர்கள்..!
x

சென்னையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார். நள்ளிரவில் இவருடைய வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் திருட முயற்சித்துள்ளனர். இதனால், சத்தம் கேட்டு ராம்குமார் வெளியே வர, அவரை கண்ட மர்ம நபர்கள் அதிர்ச்சியடைந்து தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ராம்குமார் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 2 இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள கோவில், டீக்கடை என்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது பதிவாகியிருந்தது.

இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தண்டையார் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story