விவசாயத்தை அழித்து கொண்டுவரப்படும் எந்த முன்னேற்றமும் தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு


விவசாயத்தை அழித்து கொண்டுவரப்படும் எந்த முன்னேற்றமும் தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 22 Nov 2023 7:37 AM GMT (Updated: 22 Nov 2023 7:40 AM GMT)

செய்யாறில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரத்தை அடுத்த மேல்மா கூட்டு சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக கட்சியினர், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் கூறும்போது, "விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைக்க வேண்டாம். விவசாயத்தை அழித்து கொண்டுவரப்படும் எந்த முன்னேற்றமும் தேவையில்லை.

சாலை இல்லை என்றால் கூட வாழ முடியும் விவசாயம் இல்லை என்றால் வாழ முடியுமா? மக்கள் எதிர்த்ததால் அன்னூர் சிப்காட் திட்டம் கைவிடப்பட்டது. மேல்மாவிலும் அப்படி செய்ய வேண்டும்" என்று கூறினார்.


Next Story