மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி; ஓட்டு போட்ட பின் வைகோ பேட்டி


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி; ஓட்டு போட்ட பின் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 6 April 2021 6:17 PM GMT (Updated: 6 April 2021 6:36 PM GMT)

தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று ஓட்டு போட்ட பின் வைகோ கூறினார்.

வைகோ ஓட்டு போட்டார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி ஆகும். அவர் தனது மகன் துரை வையாபுரியுடன் நேற்று கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவர் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

200 இடங்களில் வெற்றி
மக்கள் புன்முறுவலுடன் வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதன்மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அவர் முதல்-அமைச்சர் ஆவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்படும். அ.தி.மு.க.வினர் 7 தொகுதிகளில் தேர்தலை நிறுத்துமாறு அளித்துள்ள கோரிக்கை மனு குப்பைத்தொட்டிக்கு போகும். அதனால் ஒரு பயனும் ஏற்படப்போவது இல்லை.  இனிவரும் காலம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story