தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 May 2021 8:42 AM GMT (Updated: 3 May 2021 8:42 AM GMT)

தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.  

சட்டமன்ற பெரும்பான்மைக்கு 118  தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும். எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Next Story