முன்னாள் பிரதமர் பூட்டோவிடம் நியாயமான விசாரணை நடைபெறவில்லை - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு


முன்னாள் பிரதமர் பூட்டோவிடம் நியாயமான விசாரணை நடைபெறவில்லை - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு
x

இந்த வழக்கு தலைமை நீதிபதி காசி பேஸ் ஈசா தலைமயிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 1973 முதல் 1977 வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்தவர் சுல்பிகர் அலி பூட்டோ. 1977-ல் இவரது அரசை ராணுவம் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து, ராணுவ ஆட்சியாளர்கள் பூட்டோ மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த வழக்கில் பூட்டோவுக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து 1979-ம் ஆண்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.

இது ஒரு நீதிமன்ற கொலை என்றும், ராணுவ ஆட்சியாளர்களும், சுப்ரீம் கோர்ட்டும் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை தூக்கிலிட்டதாகவும் பூட்டோ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சூழலில் பாகிஸ்தானின் தற்போதைய அதிபரும், பூட்டோவின் மருமகனுமான ஆசிப் அலி சர்தாரி தனது மாமனாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற காசி பேஸ் ஈசா, ஆசிப் அலி சர்தாரியின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி காசி பேஸ் ஈசா தலைமயிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமர்வு பூட்டோ மீதான வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என கருத்து தெரிவித்தது.

அதே சமயம் அரசியலமைப்பு மற்றும் சட்டம் அனுமதிக்காததால் பூட்டோவின் மரண தண்டனையின் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் அது ஒரு தீர்ப்பாக பராமரிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தது.


Next Story