திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
x

கோப்புப்படம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆவதாக கூறப்படுகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 29 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பயணியர் விடுதி பங்களா அருகில் வரை வரிசையில் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை 35 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆனது.

நேற்று முன்தினம் 65 ஆயிரத்து 570 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24 ஆயிரத்து 446 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 53 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story