சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள்


சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x

போட்டியில் 20 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட பெண்களுக்கான யோகாசனம், தடகளம், எறிபந்து, நீச்சல் ஆகிய போட்டிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடத்தப்படுகிறது.

இதில் நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்திலும், தடகளம், எறிபந்து, யோகாசனம் போட்டிகள் நேரு பார்க் விளையாட்டு அரங்கிலும் நடக்கிறது. யோகாசன போட்டியில் பத்மாசனம், மத்ஸ்யாசனம், ஹலாசனம், உஷ்ட்ராசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களும், தடகளத்தில் 100, 200, 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பந்தயங்களும், நீச்சலில் 50 மீட்டர் பிரீஸ்டைல், 50 மீட்டர் பேக்ஸ்டிரோக், 50 மீட்டர் பிரஸ்ட்ரோக், 50 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே ஆகிய பந்தயங்களும் இடம் பெறுகின்றன.

இந்த போட்டியில் 20 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் போட்டிக்குரிய தினத்தன்று விளையாட்டு அரங்கில் காலை 7 மணிக்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். காலை 9 மணிக்கு மேல்வருபவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தின் தொலைபேசியான 9514000777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story