வால்பாறையில் 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை, கூண்டில் சிக்கியது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கி உள்ளது.
ஆட்கொல்லி சிறுத்தி சிக்கி உள்ளதால் பச்சை மலை பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 2 பைபர் படகு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களிடம் இருந்து மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 சதங்கள் அடித்தும் தோல்வி.. 148 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி
இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து அசத்தினர். அதேபோல் 2-வது இன்னிங்சில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்தனர். இருப்பினும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்
நெல்லையில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் (இரவு 7.15 மணி) மோதுகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மெக்சிகோவில் துப்பாக்கி சூடு; 12 பேர் பலி
மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தெருவில் குடித்து விட்டு, நடனம் ஆடியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது. துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை
போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
அதன்பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசரணை 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. அதனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவன் கடத்தல் விவகாரம்: எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம்கோர்டின் உத்தரவை அடுத்து 2 பேர் மீதும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக இன்றும் (26-06-2025) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் அறிவித்து உள்ளார்.
திருச்செந்தூர் கும்பாபிஷேக நேர விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் 1-ந்தேதி விசாரணை
இந்த வழக்கை நாளையே அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.