ஒரே காரில் பிரதமர் மோடி - புதின் பயணம்
இந்தியா - ரஷியா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு மோடி - புதின் ஒரே காரில் சென்றனர். சீனாவின் தியான் ஜின் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தும் இடத்திற்கு ஒரே காரில் இந்திய பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் பயணம் செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 250 பேர் பலி என தகவல்
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய 'கேஜிஎப்' பட நடிகர்...ரசிகர்கள் கவலை
இரண்டு பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் வந்த 'கேஜிஎப்'. இத்திரைப்படம் கன்னட திரைப்பட துறையின் அந்தஸ்தை உயர்த்தியது மட்டுமில்லாமல், ஹீரோ யாஷையும் இந்திய அளவில் பிரபலமாக்கியது.
இதற்கிடையில், அதே படத்தில் நடித்த ஒரு நடிகர் இப்போது அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 24,000 மதுபாட்டில்கள் நாசம் அடைந்தன. மின் கம்பியில் லாரி உரசியதால் தீ விபத்து எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி மீது நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சென்னை வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். விமான நிலையம் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை நந்தம்பாக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிறகு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர் நாளை மறுதினம் திருவாரூர் சென்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்கிறார். பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்து திருச்சியில் இருந்து டெல்லி திரும்ப உள்ளார்.
சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
ஒடிசாவில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்ற வழக்கில், Anmol Mines என்ற நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை. பி.எம்.டபிள்யூ., ஆடி உள்ளிட்ட 10 சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அதைபோல சூப்பர் பைக்குகள், ரூ.1.12 கோடி மதிப்புடைய நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்துள்ளது.
சசிகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ராகுல் காந்தி
தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி எம்பி சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் இருந்தபடியே இன்றும் 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சசிகாந்த் செந்திலின் உடல்நலம் குறித்து ராகுல்காந்தி விசாரித்தார்.
ரூ.1,000 கோடி அளவுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பால் ரூ.1000 கோடி அளவுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அமெரிக்காவுக்கு முந்திரி ஏற்றுமதி செய்வது அடியோடு நிறுத்தம் செய்யப்பட்டது.
''அனுஷ்காவின் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்'' - ''காதி'' பட இயக்குனர்
''காதி'' படத்தின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார் அனுஷ்கா. இந்த படம் பாக்ஸ் ஆபீஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபு , ஜகபதி பாபு மற்றும் சைதன்யா ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.