இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

Update:2025-12-11 08:59 IST
Live Updates - Page 6
2025-12-11 03:43 GMT

ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது 


ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

2025-12-11 03:41 GMT

பாகிஸ்தான்-இந்தோனேசியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து 


இந்தோனேசியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் சென்றார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா அதிபர் ஒருவர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். இஸ்லாமாபாத் சென்ற அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

2025-12-11 03:39 GMT

சென்னை விமான நிலையத்தில் இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து 


சென்னை விமான நிலையத்தில் 10-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2025-12-11 03:38 GMT

ஒரு போன் அழைப்பில் போரை நிறுத்துவேன் ; டொனால்டு டிரம்ப் பேச்சு 


தாய்லாந்து-கம்போடியா இடையே மோதல் முற்றிவரும் நிலையில் ஒரு போன் அழைப்பில் அந்த போரை நிறுத்திவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

2025-12-11 03:37 GMT

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு 


டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025-12-11 03:34 GMT

சென்னையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 


தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2025-12-11 03:34 GMT

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவு- படிவம் கொடுக்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பு 


இதுவரை படிவங்களை வாங்கி பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் இன்றே இந்த இறுதி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரப்பி கொடுக்க வேண்டும்.

2025-12-11 03:30 GMT

இன்றைய ராசிபலன் (11-12-2025): சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும் நாள்..! 


கன்னி

உத்யோகத்தில் மதிப்புக் கூடும் மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

Tags:    

மேலும் செய்திகள்