இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

Update:2025-12-18 08:50 IST
Live Updates - Page 5
2025-12-18 03:42 GMT

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன் 


காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.

2025-12-18 03:40 GMT

23-ந்தேதி வரை பொறுத்திருக்க கூறிய ஓ.பன்னீர்செல்வம் - எதற்காக...? 


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நடக்கிறது. செங்கோட்டையன், த.வெ.க.வுக்கு சென்றதில் இருந்து அவர் என்னிடம் பேசவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க 23-ந்தேதி என் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதுவரை நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2025-12-18 03:38 GMT

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் கூட்டம் சேர்க்க அனுமதியில்லை 


பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்.

2025-12-18 03:30 GMT

ஆஷஸ் டெஸ்ட் சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்த கேரி 


ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதம் அடித்ததும் வானத்தை நோக்கி பேட்டை உயர்த்தியபடி உணர்ச்சிவசப்பட்டார். அவர், புற்று நோய் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் மறைந்த தனது தந்தை கோர்டானுக்கு சதத்தை அர்ப்பணித்தார்.

பின்னர் அலெக்ஸ் கேரி கூறுகையில், 'தற்போது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு வானத்தை நோக்கி ஏன் பார்த்தேன் என்பது உங்களுக்கு தெரியும். நான் கண்ணீர் விடாமல் இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. உள்ளூர் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சதம் அடித்தது சிறப்பானதாகும். இந்த சிறப்பான சதத்தை மறைந்த எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்' என்றார்.

2025-12-18 03:28 GMT

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற டெம்பேலே 


கடந்த செப்டம்பர் மாதம் சிறந்த வீரருக்குரிய பாலோன் டி ஓர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2025-12-18 03:26 GMT

ஆஷஸ் 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371 ரன்களுக்கு ஆட்டமிழப்பு 


இன்று 2வது நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்டார்க், லயன் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி ஸ்டார்க் அரைசதமடித்தார்.பின்னர் அவர் 54 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் லயன் 9 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி இறுதியில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசி ஆர்ச்சர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் இங்க்லாந்து அணி விளையாடி வருகிறது

2025-12-18 03:23 GMT

ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம்: தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார் 


ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.

2025-12-18 03:21 GMT

இன்றைய ராசிபலன் (18-12-2025): சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும் நாள்..! 


கும்பம்

ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் உபாதையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Tags:    

மேலும் செய்திகள்