இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

Update:2025-08-23 10:04 IST
Live Updates - Page 2
2025-08-23 10:41 GMT

''அதுதான் எனது ஒரே கவனம்'' - கல்யாணி பிரியதர்ஷன்

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன், தற்போது தமிழில் கார்த்தியுடன் ''மார்ஷல்'' படத்தில் நடித்து வருகிறார்.

2025-08-23 09:56 GMT

''லியோ'' - பொய் வசூலை சொன்னதா படக்குழு?...வெளிவந்த அதிர்ச்சி உண்மை

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ''லியோ படத்தின் வசூல் பொய் என சிலர் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். தயாரிப்பாளர் லலித்தின் வருமான வரித்துறை அறிக்கையை வைத்து , லியோ வசூல் உண்மையில்லை என சிலர் பேச, அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார்.

2025-08-23 09:14 GMT

"காலத்தால் அழியாதது" ...ரஜினியை சந்தித்த சிம்ரன் நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான சிம்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

2025-08-23 08:52 GMT

இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்

நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

2025-08-23 08:29 GMT

மத்திய வேளாண் துறை மந்திரியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லியில் மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகானை, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்தார்.

டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக விவசாய திட்டங்கள், கோரிக்கைகள் தொடர்பாக வேளாண் துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-08-23 07:55 GMT

விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை - திருமாவளவன்

செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ தவெகவின் 2வது மாநில மாநாடு வெற்று கூச்சல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறது. 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்த காலம் வேறு, இப்போதுள்ள காலம் வேறு, 2026 தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது.

அவரது பேச்சில் ஆக்கப்பூர்வமாக எந்த கருத்தும் இல்லை.. கருத்தியலும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக பற்றிய விஜய்யின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அதற்கு அ.தி.மு.க.வினர் தான் பதில் அளிக்க வேண்டும். நான் எம்.ஜி.ஆரை பற்றி பேசிய போது எகிறியவர்கள், இப்போது வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

2025-08-23 07:29 GMT

மாணவர்களிடையே போதை பழக்கம்: கணக்கெடுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு


பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் உள்ளவர்கள் குறித்து மதுவிலக்கு மற்றும் கலால் துறை கணக்கெடுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுவிலக்கு துறை கேட்கும் கேள்விகளுக்கு செப்.10ம் தேதிக்குள் உரிய பதில்களை அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-08-23 07:23 GMT

அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக சமீபத்தில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-08-23 07:14 GMT

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-08-23 07:13 GMT

ஐதராபாத்தில் சோகம்; ஒரே குடும்பத்தினர் 5 பேர் மர்ம மரணம்


அவர்களுடைய மர்ம மரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதுபற்றி தெரியவரும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவம் ரஞ்சோலா கிராமத்தில் பெருத்த சோகம் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்