அதிமுக பிரமுகர் மனைவி கொலை
கோவைபன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு போலீஸிடம் சரண் அடைந்துள்ளார். கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் சுரேஷ் சரணடைந்த நிலையில் தடாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவ. 22ல் ஊர்க்காவல் படை ஆள்தேர்வு
நெல்லை மாநகரில் நவம்பர் 22ஆம் தேதி ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் தேர்வில் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி கூறியுள்ளார்.
ஏறிய வேகத்துடன் இறங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11.075க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு பிறகு படிப்படியாக தங்கம் விலை குறைந்து கொண்டிருக்கிறது. தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
12 கி.மீ வேகத்தில் மோந்தா
மோந்தா புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மசூலிப்பட்டினத்தில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து 240 கி.மீ. தொலைவில் மோந்தா புயல் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே 90-100 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி
சென்னை,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு,
கோயம்புத்தூர்,
காஞ்சிபுரம்,
கன்னியாகுமரி,
ராணிப்பேட்டை,
தென்காசி,
தேனி,
நீலகிரி,
திருநெல்வேலி,
திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
‘ப்ரோ கோடு' தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த தடை
ப்ரோ கோடு ('BRO CODE') தலைப்பை திரைப்படத்திற்கு பயன்படுத்த நடிகர் ரவி மோகனுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது
இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோஸ்பிரிடம் பிவரேஜஸ் ( INDOSPIRITEM BEVERAGES) நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி - தவெக தலைவர் விஜய்
விவசாயிகளின் வேதனைகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025) ஆரஞ்சு அலர்ட்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:-
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
தேனி
தென்காசி
நெல்லை (மலைப்பகுதிகள்)
கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக்கு சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன..?
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மழையின் அளவு 17-10-2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (28.10.20251 காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர்மழை பெய்துள்ளது. 27-10-2025 நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (28-10-2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 5203 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவைக்கு வருகை தந்து உள்ளார்.