சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக உள்ளது - சென்னை மாநகராட்சி

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.;

Update:2025-10-28 06:39 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

அதேவேளை, சென்னையில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கமின்றி வடிந்துவிட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்