70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம்... ... டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக-  ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
Daily Thanthi 2025-02-08 01:36:01.0
t-max-icont-min-icon

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைக்குமா?, பாஜக ஆட்சியை பிடிக்குமா?, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்பது காலை 11 மணியளவில் தெரியவரும். டெல்லி தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

1 More update

Next Story