ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே ஆபரேஷன் சிந்தூர்  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
x
Daily Thanthi 2025-05-07 12:15:00.0
t-max-icont-min-icon

ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில், ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு திரளாக சென்ற இளைஞர்கள் பலர் இன்று ரத்த தானம் அளித்தனர்.

இதற்காக அவர்கள், நீண்ட வரிசையில் நின்றனர். இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் குப்தா கூறும்போது, ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால், அதற்கு ரத்த தானம் அளிக்க தயாராக நாங்கள் இருக்கிறோம் என்றார். அவரும் இந்த ரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதற்காக இளைஞர்கள் பலரும் முன்வந்து நாட்டுக்கு பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

1 More update

Next Story