பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டுள்ளது - காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு


பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டுள்ளது - காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
x

பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் உள்ள பையில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. அவர் கர்நாடகாவில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாஜக தேர்தல் பணிக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு வந்த ஹெலிகாப்டரில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டதாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா தேர்தல் பாஜக பொறுப்பாளருமான அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது அவர் வந்த ஹெலிகாப்டரில் பையில் பெருமளவு பணம் கொண்டுவரப்பட்டது என்று வினய் குமார் குற்றஞ்சாட்டினார்.


Next Story