ராஜிவ்காந்தி நேக்ஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் யூத் டெவலெப்மெண்ட்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்

இந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேர கண்டிப்பாக நுழைவுத்தேர்வு அவசியமாகும்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் ராஜிவ்காந்தி நேக்ஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் யூத் டெலலெப்மெண்ட் (Rajiv Gandhi National Institute of Youth Development) ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதுரில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (Institution of National Importance)
இந்த கல்வி நிறுவனம் இளைஞர்கள் வளர்ச்சி, இளையோர் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு உதவும் வகையில் பயிற்சிகளையும், படிப்புகளையும் வழங்கி வருகிறது.
பயிற்சி மையங்கள்
இங்கு பயிற்சிகள், ஆராய்ச்சி போன்ற பல்வேறு பணிகளுக்காக இங்கு
சில பயிற்சி மையங்கள் (Centres) அமைக்கப்பட்டுள்ளன. அவை-
1. Centre for Training Orientation and Capacity Building
2. Centre for Policy and Action Research
3. Centre for Monitoring, Evaluation and Impact Analysis
4. Centre for National Youth Resources
5. Centre for National and International Collaboration
6. Centre for Tribal and North East Youth Development
7. Centre for Dalit and Subaltern Studies
பட்ட மேற்படிப்புகள்
இங்கு நடத்தப்படும் பட்ட மேற்படிப்புகள் விவரம் வருமாறு:
1.எம்.எஸ்.சி., அப்ளைடு சைக்காலஜி (M.Sc. Applied Psychology)
2.எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்டிரேக்ஷன் (M.A. Public Administration)
3.எம்.எஸ்.டபிள்யூ யூத் அன்ட் கம்யூனிட்டி டெவலெப்மெண்ட் (M.S.W. Youth and Community Development)
4..., យល់ (M.A., Sociology)
5.எம்.ஏ., டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் (M.A., Development Studies)
6.எம்.ஏ.,ஆங்கிலம் (M.A., English)
1.எம்.எஸ்.சி., அப்ளைடு சைக்காலஜி (M.Sc. Applied Psychology)
இந்தப்படிப்பில் சேர பி.ஏ., / பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் உளவியல் (Psychology), படிப்பை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். இந்தப் பட்டப்படிப்புகளில் 4 செமஸ்டர் தேர்வுகளில் ஏதாவது ஒரு செமஸ்டரில் உளவியல் பாடத்தை படித்து பட்டம் பெற்றவர்களும் இந்தப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் குறைந்தபட்சமாக 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு (Reservation) அடிப்படையில் மதிப்பெண்களில் தளர்வும் (Relaxation) உண்டு.
2.எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்டிரேக்ஷன் (M.A. Public Administration)
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இடஒதுக்கீடு (Reservation) அடிப்படையில் மதிப்பெண்களில் தளர்வும் (Relaxation) 2.
3.எம்.எஸ்.டபிள்யூ யூத் அன்ட் கம்யூனிட்டி டெவலெப்மெண்ட் (M.S.W. Youth and Community Development)
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.
4. எம்.ஏ., சோசியாலஜி (M.A., Sociology)
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இடஒதுக்கீடு (Reservation) அடிப்படையில் மதிப்பெண்களில் தளர்வும் (Relaxation) 2.
5.எம்.ஏ., டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் (M.A., Development Studies)
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இடஒதுக்கீடு (Reservation) அடிப்படையில் மதிப்பெண்களில் தளர்வும் (Relaxation) 2.
6.எம்.ஏ., ஆங்கிலம் (M.A., English)
இந்தப்படிப்பில் சேர பி.ஏ., ஃ பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் குறைந்தபட்சமாக 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு (Reservation) அடிப்படையில் மதிப்பெண்களில் தளர்வும் (Relaxation) 2.
நுழைவுத்தேர்வு
இந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேர கண்டிப்பாக គ្រប់ (Common University Entrance Test) அவசியமாகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பட்ட மேற்படிப்புகளில் மொத்தம் 4 செமஸ்டர்கள் நடத்தப்படும். அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கில வழியில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் விவரங்களுக்கு...
மேலும் சில விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி....
Rajivgandhi National Institute of Youth Development,
Post Box No.6,
Sriperumbudur Post,
Tamilnadu-602 105.
Phone: 044-27163127
Website: www.rgniyd.go.in






