ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகியிடம் அமலக்கத்துறை விசாரணை

விக்னேசுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது
டெல்லி,
கர்நாடகாவை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ் ஷிஷிர். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தி இங்கிலாந்து குடிமகன் என்றும் ஆகையால் அவர் இந்திய தேர்தலில் போட்டியிட உரிமை இல்லை என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, விக்னேஷ் ஷிஷிருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், பாஜக நிர்வாகி விக்னேஷ் ஷிஷிரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். வர்த்தகம் உள்பட பிற வழிகளில் வெளிநாட்டு பணத்தை முறைகேடாக பெற்றது தொடர்பாக விக்னேசுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனை தொடர்ந்து விக்னேஷ் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.






