உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்

ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்
Published on

புதுடெல்லி,

உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், சமூகத்தின் நிலை மற்றும் உலகுக்கு அந்த நாடு அளிக்கும் பங்களிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாராகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பொருளாதாரத் திறன், ராணுவத்திறன், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு, கலாசார செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தையும் (80.5 புள்ளிகள்), அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் (73.7 புள்ளிகள்) பெற்று இருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் குறியீட்டின்படி, இந்த 2 நாடுகளும் மிக சக்திவாய்ந்த நாடுகளாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் (40 புள்ளிகள்) உள்ளது.

இந்த புள்ளி விவரங்களை வைத்து இந்தியா முக்கிய சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முன்னேற்றத்துக்கு நாட்டின் பொருளாதார மீட்பு, அதிகரித்த ராணுவபலம், சர்வதேச அரங்கில் ராஜதந்திர செல்வாக்கு, அரசியல் முக்கியத்துவம் போன்றவை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதனையடுத்து 38 புள்ளிகளுடன் ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷியா 32.1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகள் நடுத்தர சக்திவாய்ந்த நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com