டிரைவருடன் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த வெறிச்செயல்


டிரைவருடன் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 Nov 2025 1:36 PM IST (Updated: 16 Nov 2025 1:48 PM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவி, டிரைவரை கடத்தி, சரக்கு வாகன உரிமையாளர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகல்கோட்டை,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் 10 பேர் கும்பல், ஒரு பெண், ஒரு வாலிபரை கடத்தி மரக்கட்டையால் கொடூரமாக தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதாவது அந்த வீடியோவில், பெண்ணையும், வாலிபரையும் மரக்கட்டையால் அவர்கள் கொடூரமாக தாக்குகிறார்கள். இருவரும் வலி தாங்க முடியாமல் அய்யோ... அம்மா... கதறுகிறார்கள். இருப்பினும் அவர்களை விடாமல் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த பலரும் கொடூர தாக்குதலை பார்த்து பதறிபோனார்கள். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் போலீசாருக்கும், கர்நாடக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து போலீசாரின் கவனத்துக்கும் சென்றது. போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதன்விவரம் பின்வருமாறு:-

பாகல்கோட்டை டவுன் நவநகர் பகுதியை சேர்ந்தவர் யங்கப்பா சூரி (வயது 45). இவரது மனைவி போரவவ்வா (40). யங்கப்பா சூரி சொந்தமாக சரக்கு வாகனம் வைத்துள்ளார். அந்த சரக்கு வாகன டிரைவராக பிரகாஷ் ஒசமணி (25) என்பவர் பணியாற்றி வந்தார். இதனால் அடிக்கடி பிரகாஷ் ஒசமணி தனது முதலாளி யங்கப்பா சூரி வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது போரவவ்வாவிடம் பிரகாஷ் ஒசமணி சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. அடிக்கடி இருவரும் பேசி வந்ததால், இருவரின் நடத்தையிலும் யங்கப்பா சூரி சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போரவவ்வாவுடன் யங்கப்பா சூரி தகராறு செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ந்தேதி யங்கப்பா சூரி, தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து மனைவி போரவவ்வா, டிரைவர் பிரகாஷ் ஒசமணி ஆகியோரை ஒரு காரில் கடத்தி ஊருக்கு வெளிப்புறமான காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் இருவரின் கை, கால்களை கட்டிப்போட்டு மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பரசப்பா மதரா என்பவர் தான், பிரகாஷ் ஒசமணியின் கை, கால்கள், முதுகில் மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியதும், மற்றொருவர் போரவவ்வாவை தாக்கியதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த அக்டோபர் 31-ந்தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் யங்கப்பா சூரி, பரசப்பா மதரா, துளசப்பா, சூரி, கிரண் வால்மீகி, சங்கமேஷ் உள்பட 10 பேர் மீது நவநகர் போலீசில் வழக்குப்பதிவானதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்டோபர் 3-ந்தேதி நடந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ தான் தற்போது வைரலானதும் தெரியவந்துள்ளது.

1 More update

Next Story