தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2025 3:30 AM IST (Updated: 20 Nov 2025 3:31 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ந் தேதி (இன்று) நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story