திருப்பதிக்கு ரெயிலில் போறீங்களா..? 6 நாட்கள் காட்பாடி வரைதான் இந்த ரெயில் செல்லும்..!


திருப்பதிக்கு ரெயிலில் போறீங்களா..? 6 நாட்கள் காட்பாடி வரைதான் இந்த ரெயில் செல்லும்..!
x

கோப்புப்படம் 

பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் திருப்பதி - காட்பாடி இடையே சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குண்டக்கல் பிரிவில் திருப்பதி - காட்பாடி இடையே பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால், குறிப்பிட்ட நாட்களில் திருப்பதி - காட்பாடி இடையே சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, நாளை (செவ்வாய்கிழமை), நாளை மறுநாள் (3-ந் தேதி), 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி - திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது, காட்பாடியுடன் ரெயில் நிறுத்தப்படும். பிறகு அங்கிருந்தே விழுப்புரத்திற்கு புறப்பட்டு செல்லும்.

அதேபோல், திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில், காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு பயணிகள் ரெயில், ஜோலார்பேட்டை - காட்பாடி மெமு பயணிகள் ரெயில் ஆகியவற்றின் சேவைகளும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story