பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்

பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்
x

ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் ரெயில் மண்டபத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல், ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 5.50 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும் ரெயிலும் மண்டபத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story