சென்னைக்கு வந்த சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னைக்கு வந்த சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

விமானத்தில் நடத்தப்பட்ட பலத்த சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

சென்னை,

சென்னை விமான நிலையத்துக்கு 237 பயணிகளுடன் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விமானம் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். அவர்களின் உடைமைகளை சோதனை நடத்திய பின்னர் விமானத்தில் பலத்த சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


Next Story