தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு: தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் - தி.மு.க. அறிவிப்பு

வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் வரும் மார்ச் 12ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும் ! எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது
அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுவார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






