திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
Published on

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கிவிட்டு அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்த ரெட்டியபட்டி, RMTC-காலனியை சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (வயது 26) என்பவரை முன்விரோதம் காரணமாக பொன்னகரத்தை சேர்ந்த ராம்குமார்(23), ஜான்பாண்டியன்(26), விஜயபாண்டி(27), NGO-காலனியை சேர்ந்த சிவபாண்டி(27) ஆகிய 4 பேரும் கத்தியால் சரமாரியாக குத்தியதோடு, கையால் அடித்து, காலால் உதைத்தனர்.

இதில் காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சித்திக் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com