தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கண்டித்த அந்த சிறுமியின் தாத்தாவை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 1வது தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் சதீஷ் (வயது 19). இந்த வாலிபர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைப் பார்த்து கண்டித்த சிறுமியின் தாத்தாவை அந்த வாலிபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் காயம் அடைந்த முதியவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






