நெல்லையில் மனைவியை தாக்கிய கணவன் கைது

நெல்லையில் ஆறுமுகபாண்டி தனது மனைவி நித்தியாவை அவதூறாகப் பேசி பெண் என்றும் பாராமல் கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம், திசையன்விளை, இட்டமொழியை சேர்ந்த ஆறுமுகபாண்டி (வயது 30) என்பவரும் நித்தியா (25) என்பவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (1.5.2025) தனது உடைமைகளை எடுப்பதற்காக நித்தியா, ஆறுமுகபாண்டி வீட்டிற்கு சென்றபோது, அவரை ஆறுமுகபாண்டி அவதூறாகப் பேசி பெண் என்றும் பாராமல் கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நித்தியா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆறுமுகபாண்டியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






