சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை

அம்பத்தூர், ஓரகடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை
Published on

சென்னையை அடுத்த அம்பத்தூர், ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் அழகரசன் (வயது 37). இவர், 2019-ம் ஆண்டு திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகரசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் அழகரசனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com