பாமக உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு: அன்புமணி ராமதாஸ்


பாமக உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு: அன்புமணி ராமதாஸ்
x

மணல் குவாரிகளில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம்,

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;-

டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் போராடியதால் தான் கோர்ட்டு உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளில் 7 ஆலைகளை தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர். டாஸ்மாக் கடைகளை அடைத்த பின்னர் சந்து கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மணல் குவாரிகளில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது.

ஒரு சில கட்சிகளில் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதற்குள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, எங்கள் உட்கட்சி பிரச்சினையாக இருந்தாலும் சரி சுமுகமாக தீர்க்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்கூட்டியே தெரிவிக்க முடியாது, விரைவில் அறிவிப்பேன்.

மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து தி.மு.க. விளம்பர ஆட்சி நடத்துகிறது. நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story