திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் மகாராஷ்டிராவில் கைது


திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் மகாராஷ்டிராவில் கைது
x

மானூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்கிருஷ்ணா சேத்வால் (வயது 54) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 ஆண்டு 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன நபரை, மானூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் மகாராஷ்டிராவிற்கு சென்று கைது செய்து, மானூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story