திருநெல்வேலி: கோவில் பூட்டை உடைத்து குத்துவிளக்கு சூலாயுதம் திருடியவர் கைது

ஏர்வாடி பகுதியில் உள்ள கோவிலில் பூசாரி, பூஜை செய்வதற்காக சென்று பார்த்தபோது அங்கே பித்தளை குத்துவிளக்கு, பித்தளை சூலாயுதம், வெள்ளி காப்பு ஆகியவற்றை காணவில்லை.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, வேப்பன்குளம், மேலத் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 50), வேப்பன்குளத்திலுள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் 29.7.2025 அன்று சுந்தர்ராஜ் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்று பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலுக்குள் இருந்த பித்தளை குத்து விளக்கு, பித்தளை சூலாயுதம், வெள்ளி காப்பு, ஆகியவற்றை காணவில்லை.
இதுகுறித்து சுந்தர்ராஜ் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் வேப்பன்குளத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(49) என்பவர் கோவிலில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், ஆதிநாராயணனை நேற்று கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






