இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025


தினத்தந்தி 13 Sept 2025 8:50 AM IST (Updated: 14 Sept 2025 9:02 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 13 Sept 2025 2:55 PM IST

    ''சூப்பர் மேரியோ'' படத்தின் 2-ம் பாகம் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்  

    பிரபல அனிமேஷன் திரைப்படமான ''சூப்பர் மேரியோ புரோஸ்'' படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

  • 13 Sept 2025 2:38 PM IST

    அதர்வாவின் அடுத்த வெற்றிப்படமாகுமா ''தணல்'' - சினிமா விமர்சனம்

    ''டிஎன்ஏ'' படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா நடித்து வெளியாகி இருக்கும் படம் ''தணல்''. இப்படம் எப்படி இருக்கிறது, அதர்வாவுக்கு அடுத்த வெற்றியை கொடுத்ததா என்பதை இப்போது காண்போம்.

  • 13 Sept 2025 1:47 PM IST

    பிரசாரம் செய்ய உள்ள மரக்கடை பகுதியை நெருங்கும் விஜய்.. கட்டுக்கடங்காமல் குவியும் கூட்டம்


    விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பிரசார பாயிண்ட் வரை வழிநெடுக ரசிகர்கள் திரண்டிருப்பதால், விஜயின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிரசாரம் செய்ய உள்ள மரக்கடை பகுதியை விஜய் நெருங்கி வரும்நிலையில், கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்து வருகிறது.

    காலை 10.30க்கு திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் தொண்டர்கள் அதிக அளவு திரண்டதால் அந்த பகுதிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.

    முன்னதாக பிற்பகல் 1 மணிக்கு அரியலூர், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் என அடுத்தடுத்த பாயிண்டுகள் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 13 Sept 2025 1:17 PM IST

    திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய விஜய் .. வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்

    கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    இன்று பரப்புரையை தொடங்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். கணிசமான வாக்குகளை பெறும் விஜய்யால் திமுகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக்கப் போகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் அணியாக தேர்தல் களத்தை சந்திக்க வாய்ப்பில்லை. அதேபோல் திமுக கூட்டணி கட்சிகள் அணி மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

  • 13 Sept 2025 1:08 PM IST

    நாகையில் விஜயின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

    நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    த.வெ.க.வினர் வரும் 20-ந்தேதி பிரசாரத்திற்கு அனுமதி கேட்ட நிலையில் அதே நாளில் தி.மு.க.வினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாற்று இடங்களாக பரிந்துரைக்கப்பட்ட நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் இடவசதி போதாது விஜய் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 13 Sept 2025 12:16 PM IST

    திருச்சியில் விஜய் தேர்தல் பரப்புரை.. கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மயக்கம்

    தேர்தல் பரப்புரைக்காக திருச்சி வந்த தவெக தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தவெக தலைவர் விஜய் தனது முதல் பிரசார பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கியிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நகர் முழுவதும் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி விஜய்யின் பிரசாரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  • 13 Sept 2025 11:59 AM IST

    திருச்சி மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருப்பு


    திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை பேச தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது திருச்சி டோல்கேட் பகுதியை கடந்து தொண்டர்கள் கூட்டத்தில் விஜயின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்று வருகிறது. திருச்சி மரக்கடை நோக்கி பயணம் செய்துவரும்நிலையில், விஜய் வருகைக்காக மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருந்து வருகின்றனர்.

  • 13 Sept 2025 11:15 AM IST

    தவெக தலைவர் விஜய் தாமதமாக பேசினால் வழக்குப்பதிய வாய்ப்பு

    திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை பேச தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது.

    இந்த சூழலில் குறித்த நேரத்தில் மரக்கடை பகுதிக்கு விஜய் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாமதமாக பேசினால் தவெக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 13 Sept 2025 11:01 AM IST

    திருச்சி மரக்கடை நோக்கி பயணம்.. போக்குவரத்து நெருக்கடியில் விஜய்


    பிரச்சார வாகனத்தை தவெக தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர். தொண்டர்கள் கூட்டத்தில் விஜயின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்று வருகிறது. திருச்சி மரக்கடை நோக்கி பயணம் செய்துவரும்நிலையில், போக்குவரத்து நெருக்கடியில் விஜய் சிக்கி உள்ளார். இதனையடுத்து திருச்சி மரக்கடை பகுதி முழுவதுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் முற்றிலுமாக போக்குவரத்து ஸ்தமித்துள்ளது.

  • 13 Sept 2025 10:37 AM IST

    மலர்தூவி விஜயை வரவேற்கும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள்


    திருச்சியில் பிரசார செய்ய உள்ள தவெக தலைவர் விஜயை வரவேற்க சாலை நெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். மேலும் பிரசார வானத்தில் வரும் விஜயை மலர்தூவி தவெக தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் திருச்சி மரக்கடை பகுதி ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது.

1 More update

Next Story