இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 Oct 2025 11:57 AM IST
ஆமதாபாத் டெஸ்ட்: ராகுல் சதம்.. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற இந்தியா
2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
- 3 Oct 2025 11:52 AM IST
முதல்முறையாக இந்தியா வரும் தலீபான் தலைவர்
ஆப்கானிஸ்தான் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர்கான் முத்தகி வரும் 9ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார்.
தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக ஆப்கான் வெளியுறவு மந்திரி இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலீபான் தலைவர்களுக்கு பயண தடை உள்ள நிலையில், அமீர்கான் முத்தகி இந்தியா வர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
- 3 Oct 2025 11:45 AM IST
அமெரிக்காவின் வரிவிதிப்பு எதிரொலி; இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க ரஷிய அதிபர் புதின் திட்டம்
இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.
- 3 Oct 2025 11:44 AM IST
பா.ஜ.க. கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இது நிச்சயமாக அக்கறை இல்லை முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 3 Oct 2025 11:40 AM IST
கோவையில் இருந்து ஆமதாபாத்துக்கு நேரடி விமான சேவை
கோவையில் இருந்து ஆமதாபாத்துக்கு இண்டிகோ நிறுவனம் வருகிற 26-ந் தேதி முதல் நேரடி விமானத்தை இயக்க உள்ளது. கொழும்புவுக்கும் விரைவில் விமானம் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொங்கு குளோபல் பாரம் அமைப்பு உள்ளிட்ட தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவையில் இருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு நேரடி விமானத்தை இயக்க வேண்டும் என்றும். இதன் மூலம் கோவையில் இருந்து ஏற்றுமதி பெருகும் என்றும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
- 3 Oct 2025 11:38 AM IST
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன..?
ராமநாதபுரத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட விரிவாக்கம் டிசம்பரில் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 3 Oct 2025 11:03 AM IST
நடுங்க வைக்கும் வெப் சீரிஸ்...ஏழு மொழிகளில் வெளியாகும் ஹாரர் திரில்லர்- எதில் பார்க்கலாம்?
ஓடிடிகளிலும் திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழைத்தவிர பிற மொழிகளிலும் திகில் படங்களைப் பார்ப்பதில் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். படங்களுடன், வெப் சீரிஸும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
அந்தவகையில் திகில் படப் பிரியர்களை நடுங்க வைக்கும் வெப் சீரிஸ் இப்போது ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
- 3 Oct 2025 11:02 AM IST
பொதுத்துறை ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனசை அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு நடப்பாண்டிலாவது தீபாவளி திருநாள் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 3 Oct 2025 11:00 AM IST
பம்பர் ஆபர் பெற்ற நடிகை... துல்கர் படத்தில் இந்த கதாநாயகியா?
லக்கி பாஸ்கர் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் தெலுங்கு இயக்குனர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல் ஓகா தாரா' என பெயரிடப்பட்டுள்ளது.
- 3 Oct 2025 10:57 AM IST
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார்... விஷால் பட நடிகை மீது வழக்கு
நடிகையும், அவரது கணவரும் தனக்கு சரியாக உணவு கூட தராமல் சித்ரவதை செய்ததாக பணிப்பெண் கூறியுள்ளார்.
















