இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Nov 2025 11:01 AM IST
காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ராமதாஸ்
முதன்மை கல்வி அதிகாரி பல மாவட்டங்களில் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 12 Nov 2025 10:59 AM IST
டெல்லி கார் வெடிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் நேற்று முன்தினம் மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 12 Nov 2025 10:34 AM IST
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Nov 2025 9:59 AM IST
பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொது சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக நேற்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
- 12 Nov 2025 9:57 AM IST
டெல்லி கார் வெடிப்பு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்
கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்- மந்திரி ரேகா குப்தா தெரிவித்துள்ளார். நிரந்தர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
- 12 Nov 2025 9:52 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச உணவு - மேயர் பிரியா
வருகிற 15-ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
- 12 Nov 2025 9:50 AM IST
ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும். அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
- 12 Nov 2025 9:46 AM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா உடல்நிலை தேறியதால் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
- 12 Nov 2025 9:44 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் ரீல்ஸ் வெளியிட்டு நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உற்சாகம்
குற்றாலம் மெயின் அருவிக்கு குளிக்க வந்த நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 12 Nov 2025 9:37 AM IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு முக்கியமானது - சிராஜ் பேட்டி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார்.


















