மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி

விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). இவர் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மகள் சூர்யபிரியா(17) புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அதிகாலை வெங்கடசன், தனது மகனை கல்லூரிக்கு வழியனுப்பி விடுவதற்காக அவரை மோட்டார் சைக்களில் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
கஞ்சனூர் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே முண்டியம்பாக்கத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு செஞ்சி வந்த லாரி வெங்கடேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன் கீழே விழுந்த தந்தை, மகள் இருவரும் லாரியின் முன்பக்கம் சிக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






