பா.ஜனதாவின் ‘சி டீம்’தான் த.வெ.க. - அமைச்சர் ரகுபதி

யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை,
புதுக்கோட்டையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் ஆச்சரிய குறி, தற்குறி என எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. எங்களுக்கு போட்டி என்று யாரும் இல்லை.
களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க.வால்தான் முடியும். த.வெ.க. என்பது பா.ஜனதாவின் ‘சி டீம்’ தான். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






