முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜய் படம் பொறித்த 'கர்சீப்' - மாணவர்கள் செயலால் பரபரப்பு

விஜய் படம் பொறித்த கைக்குட்டையை இளைஞர்கள் காட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடக்கிறது. தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு தலைமையுரை நிகழ்த்தினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் படம் பொறித்த கைக்குட்டையை இளைஞர்கள் சிலர் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், தப்பியோடிய ஒருவரைத் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






