மக்கள் விரோத தி.மு.க.விடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்


மக்கள் விரோத தி.மு.க.விடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்
x

தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!

மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!

தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story