யார் அந்த தம்பி: வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ..? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று.. 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...
இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி...
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா...
எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!
#யார்_அந்த_தம்பி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






