ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்


ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
x

ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649/22650 ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு ஈரோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னையை காலை 3.40 மணிக்கு சென்றடையும்.

இந்த நிலையில், இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி இந்த ரெயிலானது 1-ந்தேதி முதல் ஈரோட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, காலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story