காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுதலை


காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுதலை
x

நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். காசாவில்தான் இருப்போம் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காசா,

இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளால் ஏற்பட்டுள்ளது. இதில் 20 அம்ச பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானதையடுத்து காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்ப பெறப்பட்டன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின்படி 20 இஸ்ரேல் பிணைக்கைதிகள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்து உள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒப்பந்தத்தின்படி கைதிகள் பரிமாற்றம் நாளை காலை தொடங்கும் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கிடையே காசா அமைதி திட்டம் தொடர்பாக நாளை எகிப்தில் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசிதலைமை தாங்குகிறார்கள்.

மாநாட்டில் 20-க் கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இதில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹமாசின் அரசியல் பணியக உறுப்பினர் ஹோசம் பத்ரான் கூறும்போது,

டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் கீழ் காசாவில் இருந்து ஹமாஸ் வெளியேறுவதற்கான பரிந்துரையை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். காசாவில்தான் இருப்போம். டிரம்பின் திட்டத்தின் 2-ம் கட்டம் பல சிக்கல்களையும் சிரமங்களையும் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தையை நாங்கள் கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் மூலம் கையாள்கிறோம். அதிகாரப்பூர்வ கையொப்பமிடும் விஷயத்தில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்றார்.

1 More update

Next Story