ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; டிரம்ப் அதிரடி


ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; டிரம்ப் அதிரடி
x

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் வர்த்தக போருக்கு வழிவகுத்தார்.

இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், சர்வதேச அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. அதேவேளை, கூடுதல் வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அந்த காலக்கெடு வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story