உங்கள் முகவரி



வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள்

வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள்

ஒரு வீடு அழகாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதற்கு திரைச்சீலைகளும்ஒரு காரணமாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.ஜன்னல்களை மறைப்பதற்கு மட்டுமல்லாமல் வீட்டை அழகுபடுத்தவும் டிரேப்ஸ் மற்றும் கர்ட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.. ஜன்னல்களை திரையிட்டு மறைக்கும் பொழுது வீட்டிற்குள் வெப்பம் வருவது தடுக்கப்பட்டு,வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது.
23 July 2022 6:59 AM IST
பிரம்மாண்ட தோற்றம் தரும் ட்ரே சீலிங்

பிரம்மாண்ட தோற்றம் தரும் ட்ரே சீலிங்

அறைகளில் சீலிங்கின் மையப் பகுதியின் சுற்றளவை சற்று உயர்த்தி அமைக்கப்படுவது ட்ரே சீலிங் என்று அழைக்கப்படுகின்றது .இவ்வாறு உயர்த்தப்பட்ட மையப்பகுதியின் வடிவம் பொதுவாக அறையின் விளிம்பை பின்பற்றுகிறது.சதுர அறைகளில் சதுரவடிவ ட்ரே சீலிங் அமைப்புகளும்,செவ்வக அறைகளில் செவ்வக வடிவில் ட்ரே சீலிங் அமைப்புகளும் இருப்பதுபோல் வடிவமைக்கப் படுவதால் இவற்றை நீங்கள் எளிதில் கண்டறியலாம். இவ்வாறு அமைக்கப்படும் ட்ரே சீலிங்கில் நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஸ்டைல் மற்றும் அலங்கார அமைப்புகளை அமைத்துக் கொள்ள முடியும்.
16 July 2022 7:15 AM IST
உலர் சுவர்களுக்கு சிறந்த மாற்று

உலர் சுவர்களுக்கு சிறந்த மாற்று

உலர் சுவர் எனப்படும் டிரை வால் என்பது பிளாஸ்டர்போர்டு அல்லது வால்போர்டு ஆகும்..இது ஜிப்சம்,வெள்ளைத் தூள் அல்லது சாம்பல் சல்பேட் கனிமத்தை இணைத்து செய்யும் இரண்டு காகித அட்டைகளால் ஆனது.இந்த உலர் சுவர்களைப் பொருத்திய பிறகு அதிக அளவு பராமரிப்பு தேவைப்படுகிறது.பொதுவாக குழந்தைகள் க்ரையான்கள் மற்றும் மார்க்கர்களை வைத்து இந்த சுவர்களில் கிறுக்கி விளையாடும்போது நிச்சயமாக இவை சேதத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மாற்றாக மரம், பிளாஸ்டிக், ஒட்டுப்பலகை பிளாஸ்டர்கள், செங்கல்கள், மேஸனரி எனப் பல வந்து விட்டன..
16 July 2022 6:42 AM IST
காசை மிச்சப்படுத்தும் ஆயத்த சுற்றுச் சுவர்கள்

காசை மிச்சப்படுத்தும் ஆயத்த சுற்றுச் சுவர்கள்

ஒவ்வொரு வீட்டிற்கும் சுற்றுச்சுவர் என்பது மிகவும் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது. வீட்டைக் கட்டி முடித்த பிறகு சுற்றுச்சுவரை கடைசியாக எழுப்புவார்கள். சில நேரங்களில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு நேரமில்லாமல் கிரகப்பிரவேசம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு.இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை புதுமையான ஆயத்த சுற்றுச் சுவர்கள். அனைத்திலும் ரெடிமேடை விரும்பும் நாம் ரெடிமேட் சுற்றுச் சுவர்களை விரும்பாமல் இருப்போமா என்ன?
16 July 2022 6:39 AM IST
ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற சோபாக்கள்

ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற சோபாக்கள்

கௌச்சஸ் அல்லது சோபாக்கள் பொதுவாக உட்காருவதற்கும், தூங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. படுக்கை அறைகள், லிவிங் ரூம் மற்றும் வரவேற்பு அறைகளில் போடுவதற்கென்று வகைவகையான சோஃபாக்கள் வந்துள்ளன. வீடுகளில் மட்டுமல்லாது ஹோட்டல்கள், வணிக அலுவலகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போடக் கூடிய வகையில் சாதாரணமானது முதல் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கக்கூடிய வகையில் சோபாக்கள் காணப்படுகின்றன. பல்வேறுவிதமான வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் டிசைன்களில் இவை விற்கப்படுகின்றன. சோபாக்களில் இருக்கும் சில வகைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
9 July 2022 7:05 AM IST
பெருகி வரும் சிவப்புக்கல் வீடுகள்

பெருகி வரும் சிவப்புக்கல் வீடுகள்

செங்கல் சிவப்பாக இருக்கிறது,இது தவிர வேறு என்ன சிவப்புக்கல்? என்ற கேள்வி நம்முள் எழத்தான் செய்கிறது..
9 July 2022 7:01 AM IST
மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்களா ?

மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்களா ?

இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்று காற்று மாசுபாட்டைச் சொல்லலாம்.நாம் சாதாரணமாக உபயோகிக்கக்கூடிய செங்கற்களைப் போலல்லாமல் மாசுபாட்டை உறிஞ்சும் செங்கற்கள் தயாரிக்கப்படும் பொழுது அது மாசுபாட்டை உருவாக்காது.மேலும், இவ்வகை செங்கற்கள் காற்று மாசுபாட்டை குறைக்கும் மாற்றுப் பொருள் என்றும் சொல்லலாம். இதுபோன்ற செங்கற்களை “ சுவாச செங்கற்கள்” என்றும் அழைக்கிறார்கள்.
2 July 2022 6:56 AM IST
அறைகளுக்கு பொருத்தமான மேசைகள்

அறைகளுக்கு பொருத்தமான மேசைகள்

மரம், கல், உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினாலான தட்டையான மேல் பகுதியைக் கால்கள் அல்லது தூண்களின் உதவியுடன் தாங்கி நிற்கக்கூடிய அறைகலன் என்று மேசைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். மேசைகள் பல்வேறு காரணிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. அதேபோல் மேசைகளை நிலையானவை மற்றும் மெக்கானிக்கல் டேபிள்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
25 Jun 2022 7:14 AM IST
வெப்பத்தை எதிர்க்கும் அலுமினியம் பெயிண்ட்கள்

வெப்பத்தை எதிர்க்கும் அலுமினியம் பெயிண்ட்கள்

அலுமினிய வண்ணப்பூச்சு என்பது அலுமினிய செதில்கள் மற்றும் கரைப்பான் அடிப்படையிலான வண்ணப்பூச்சு ஆகியவை இணைந்து தயாரிக்கப்படுவதாகும்..இந்த பெயிண்ட் ஒரு அலுமினிய கரைசல் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.
25 Jun 2022 7:09 AM IST
வீட்டை ரசனையுடன் அழகுபடுத்த சில எளிமையான வழிகள்

வீட்டை ரசனையுடன் அழகுபடுத்த சில எளிமையான வழிகள்

வீடுகளையும் அறைகளையும் அவ்வப்பொழுது நம் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்தி அதற்கேற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து அலங்கரிக்கும் பொழுது நம் எண்ணங்களும் உணர்வுகளும் நேர்மறையான விதத்தில் மாறுகிறது இதனால் வீட்டில் இருப்போரின் உணர்வுகள் சந்தோஷமாகவும் நேர்மறையாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுகிறது.
25 Jun 2022 7:06 AM IST
பலவகையான அண்டர்பின்னிங் அடித்தளங்கள்

பலவகையான அண்டர்பின்னிங் அடித்தளங்கள்

அண்டர்பின்னிங் என்பது ஏற்கனவே உள்ள கட்டிடம் அல்லது பிற கட்டமைப்பின் அடித்தளத்தை சரிசெய்து பலப்படுத்துவதற்கான ஒரு முறையாகும்.தற்போதுள்ள அடித்தளத்தின் அகலத்தை அல்லது ஆழத்தை வலுவூட்டுவதற்காக இந்த அடிப்படை செயல்முறை செய்யப்படுகிறது.
28 May 2022 11:02 AM IST
சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா?

சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா?

நம் வீடுகளுக்கு பெயிண்ட் அடித்து வீட்டை அழகான தோற்றத்துடன் பார்ப்பது என்பது மனதுக்கு மிகவும் இனிமையான உணர்வைக் கொடுக்கும். ஆனால், பெயிண்ட் அடித்து ஒரு வார காலம் கூட அந்த வாசனையானது அறைகளை விட்டுப் போகாமல் ஒருவிதமான அசௌகரியமான உணர்வைக் கொடுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த வாசனை விரைவில் வெளியேற என்ன முயற்சிகளை மேற்கொள்வது என்பதைப்பற்றி பார்க்கலாம்.
28 May 2022 10:35 AM IST