தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் திடீர் மாற்றம்: சவுமியா அன்புமணி போட்டி


தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் திடீர் மாற்றம்: சவுமியா அன்புமணி போட்டி
x
தினத்தந்தி 22 March 2024 6:36 PM IST (Updated: 22 March 2024 6:37 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மக்களவைத்தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில், தர்மபுரி பா.ம.க வேட்பாளர் அரசாங்கத்திற்கு பதிலாக அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 More update

Next Story