நாடாளுமன்ற தேர்தல்: 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்


நாடாளுமன்ற தேர்தல்: 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
x

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, முதற்கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் ஏற்கனவே 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. 4ம் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 46 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அசாம், அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஷ்கார், ஜம்மு-காஷ்மீர், மத்தியபிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதில், மத்தியபிரதேசத்தின் ராஜ்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக திக்விஜய் சிங் களமிறக்குகிறார். தமிழ்நாட்டின் திருவள்ளூரில்(தனி) சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.








Next Story