பொதுமக்களின் பணத்தை வங்கிகள் மூலம் பிரதமர் மோடி கொள்ளையடித்து விட்டார் - கார்கே குற்றச்சாட்டு


பொதுமக்களின் பணத்தை வங்கிகள் மூலம் பிரதமர் மோடி கொள்ளையடித்து விட்டார் - கார்கே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 April 2024 4:07 PM GMT (Updated: 1 April 2024 4:10 PM GMT)

பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வங்கிகளால் பிடிக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் பொதுமக்களின் பணம் ரூ.35 ஆயிரம் கோடி பிடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வங்கி முறையை சீரழிக்கும் கலையில் பா.ஜனதா அரசு தேர்ச்சி பெற்றுள்ளது. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை எனக் கூறி, கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் கோடி பிடிக்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மாதாந்திர சராசரி இருப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பா.ஜனதா அரசு 2016ல் மீண்டும் வசூலிக்கத் துவங்கியது. ஏடிஎம் மற்றும் வங்கியில் இருந்து சொந்த பணத்தை எடுக்கவும், டெபாசிட் செய்யவும் வரி விதிக்கப்படுகிறது.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவில்லை.ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பெரும் தொழிலதிபர்களின் ரூ.19 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வங்கிகளால் பிடிக்கப்படுகிறது. பொதுமக்களின் பணத்தை வங்கிகள் மூலம் பிரதமர் மோடி கொள்ளையடித்து விட்டார். இந்த தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story