பிரதமர் மோடி சுடும் வடைகளை கூட நமக்கு தர மாட்டார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


பிரதமர் மோடி சுடும் வடைகளை கூட நமக்கு தர மாட்டார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திருச்சி மண்ணச்சநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பெரம்பலூர் தொகுதிக்கான அனைத்து வசதிகளையும் நான் கண்டிப்பாக செய்து கொடுப்பேன். மண்ணச்சநல்லூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்.

பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் தி.மு.க. ஒரு குடும்ப அரசியல் என கூறுகிறார்; தமிழ்நாடு முழுவதும் கலைஞர் குடும்பம்தான். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தி.மு.க. குடும்பம்தான். பிரதமர் மோடியால் வாழ்ந்த குடும்பம் அதானி குடும்பம் தான்.

பொதுவாக வடை சுட்டால் நமக்கு கொடுப்பார்கள். ஆனால், பிரதமர் மோடி அந்த வடையை கூட நமக்கு கொடுக்கமாட்டார். அதையும் அவரே சாப்பிட்டு விடுவார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story