நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்


நாடாளுமன்ற தேர்தல்:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்
x

மத்திய சென்னை தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார்.

திருச்சியில் நேற்று பிரசாரத்தை தொடங்கிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17-ம் தேதி மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.


Next Story